ரமளானில் இஃதிகாப்















ரமளான் மாதம் ஏனைய அனைத்து மாதங்களைவிட சிறப்புப் பொருந்தியதொரு மாதமாகும். காலம் பூராகவும் பாவங்களில் மூழ்கிய மனிதனை சற்று உசுப்பிவிடக் கூடிய ஒரு மாதமாகத்தான் இந்த  ரமளான்   மாதம் இருக்கிறது. இருபது நோன்புகளிலும் அலட்சியமாகத் திரிந்த மனிதன் கூட கடைசிப் பத்தின் சிறப்புக்களை அடைந்து கொள்வதில் ஆர்வமுடையவனாக இருக்கிறான்.

இவ்வாறு பல சிறப்புப் பொருந்திய நரக விடுதலைக்குரிய இரவை அடைந்து கொள்ள வேண்டுமாயின் இறை இல்லங்களுடன் தங்களை பிணைத்துக் கொண்டவர்களால்தான் இலகுவாக அடைந்து கொள்ள முடியும்.

ஆயிஷா ரழியல்லாஹ¤ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாளில் இருதி வரை ரமளானின் இறுதிப்பத்தில் அவர்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானில் முதல் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பிறகு நடுப்பத்தில் இஃதிகாப் இருந்தார்கள்.

பிறகு நிச்சயமாக நான் லைலத்துல் கத்ரை தேடி முதல் பத்தில் இஃதிகாப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இஃதிகாப் இருந்தேன். பிறகு நிச்சயமாக அவ்விரவு இறுதிப்பத்தில்தான் உள்ளது எனக் கூறப்பட்டது. ஆகவே உங்களில் இஃதிகாப் இருக்க விரும்புகின்றவர்கள் கடைசிப்  பத்தில்   இஃதிகாப் இருக்கட்டும்.

இஃதிகாப் இருக்கின்ற போது பெருந் தொடக்கிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும். இஃதிகாப் பருவ வயதை அடைந்தவரின் மீதுதான் கடமையாகி இருப்பினும் சிறுவர்களையும் முடிந்தளவு இவ்வணக்கத்தில் ஈடுபடுத்துவது அவர்களுக்கு ஒரு பயிற்சியாகவே அமையும். இஃதிகாப் என்பது அல்லாஹ்வை நெருங்கும் நோக்குடன் மஸ்ஜிதில் தங்கிருப்பதாகும். இச்செயற்பாடு நடைபெறவில்லையாயின் இஃதிகாப் நிறைவேற மாட்டாது.

மஸ்ஜிதிலே இஃதிகாப் இருக்கும்போது அதிகமாக நபிலான வணக்கங்களை நிறைவேற்றுவது முஸ்தஹப்பாகும். தாம் செய்த பாவங்களுக்காக இஸ்திஃபார் செய்தல், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுதல், பிரார்த்தித்தல் போன்ற இறை நெருக்கத்திற்கு வழிவகுக்கும் இபாதத்துக்களில் ஈடுபடல் வேண்டும்.

ரமளானில் பிந்திய பத்து நாட்களில் இஃதிகாஃபிற்குரிய நன்மையானது, இரண்டு ஹஜ்ஜு, இரண்டு உம்ராக்களின் நன்மையாயிருக்கும். இஃதிகாஃப் இருப்பவர் சகல பாவங்களை விட்டும் தப்பித்துக் கொள்கிறார். மஸ்ஜிதிலேயே இருப்பதன் காரணமாக அவர் வெளியே ஓடி ஆடிச் சென்று செய்ய முடியாத நண்மைகள் அனைத்தையும் அவருக்காக் அவருடைய பதிவேட்டிலே அவர் செய்த்தாக எழுதப்படுகிறது. இப்போது அந்த இஃதிகாஃபின் பாக்கியத்தால் நன்மைகள் அனைத்தையும் செய்தவரைப் போன்று ஆகிவிடுகிறார்.

No comments:

Post a Comment