அன்று பிறந்த பாலகனைப் போல்!

அன்று பிறந்த பாலகனைப் போல! رجع كيوم ولدته أمه





அன்று பிறந்த பாலகனைப் போல் ஹாஜிகள் குற்றமற்றவர்களாகத் திரும்புகிறார்கள் என்றதும், ஹாஜிகள் தங்கள் ஹஜ்ஜு ஒப்புக் கொள்ளப் பட்டதாகவும்,இனி கவலையே இல்லையென்றும் தங்களுக்கு சுவர்க்கம் கிடைத்துவிட்டதாகவும்; இறுமாந்து விடுகிறார்கள். அப்படியல்ல, ஒருவனின் ஹஜ்ஜுக்குப் பிறகு அவனது மவ்த்து வரை உள்ள வாழ்க்கை யைப் பொறுத்தே அல்லாஹ் அவனது ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளவோ ஒப்புக்கொள்ளாமலிருக்கவோ செய்கிறான்’ என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹாஜிகளே! இக்கருத்து மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே ஹஜ்ஜிக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையை கறைபடாமல்,பாவத்தூசிகள் படியாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள் தலையாய கடமையாகும். பாவங்கள் படிந்துவிட்டால், செய்த ஹஜ்ஜிற்கு எந்த பலனும், உத்தரவாதமும் இல்லை. எனவே அன்று பிறந்த பாலகனைப் போன்று நம்மைக் காத்துக் கொள்ள முயல்வோமாக!எல்லாம் வல்ல அல்லாஹ் இறுதி மூச்சி வரை அந்த நிலை தொடரவும், ஹஜ் மப்ரூராக ஆவதற்கும் அருள் புரிவானாக! ஆமீன்!

No comments:

Post a Comment