ஊனமுற்ற, நொண்டி வேலைக்காரன்

ஒரு மனிதன் தன் நண்பனுக்கு கடிதம் ஒன்று எழுதினான்.

அதில் அவனுக்கு வேலை செய்யக்கூடிய ஒரு வேலைக்காரனை அனுப்புமாறு வேண்டினான்.

நண்பனும் அவனுக்காக ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.

அவனோ நொண்டியாகவும், ஊனமுற்றவனாகவும் இருந்தான்.

அந்த ஸ்டிரச்சரில் படுத்திருக்கும் வேலைக்காரனைப்
பார்த்து தனக்குள் கூறிக்கொண்டான், நமக்கு வேலை செய்ய ஆள் கேட்டால் நம்முடைய நண்பன் ஒரு வேலைக்காரனை அனுப்பியிருக்கிறான், அவனுக்கு வேலை செய்ய ஒரு ஆள் போட வேண்டும் போல் இருக்கிறது.

பிறகு அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான், இது என்னுடைய நண்பன் எனக்கு அனுப்பிய அன்பளிப்பு, எனவே நான் இந்த நொண்டியான, ஊனமுற்ற வேலைக்காரனை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், எனக்கு இவனை கவனிப்பதற்கு மேலும் ஒரு வேலைக்காரன் தேவைப்படுகிறான்.

இப்பொழுது ஒரு நிமிடம் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும், நம்முடைய தொழுகை, நோன்பு, திக்ர், குர்ஆன் ஓதுதல் இன்னும் இது போன்று நம்முடைய அல்லாஹ்விற்கு நாம் அனுப்பி வைக்ககூடிய செயல்களின் தரம் என்ன? எவ்வளவு கவனமும், மனத்தூய்மையும் இந்த செயல்களில் இருக்கிறது?

ஆக, நம்முடைய இந்த உடைந்த, வீணான செயல்களை அல்லாஹ் தன்னுடைய மிகப்பெரும் கிருபையினால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறான்.

எனவே, நாம் நம்முடைய அல்லாஹ்வின் மீது வைத்திருக்ககூடிய நம்பிக்கை, அன்பு, பாசம் உண்மையென்றால், நம்முடைய இந்த செயல்களில் மனத்தூய்மையும், கவனமும் அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

Source: Al-Haadi

No comments:

Post a Comment